search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை"

    சங்கரன்கோவில் அருகே போலீஸ் தேடிய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது25). இவர் மீது ராஜபாளையம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

    தற்போது பாராளுமன்ற தேர்தல் நேரம் என்பதால் ராஜபாளையம் போலீசார் ரவுடிகளை கைது செய்யும் நோக்கில் பாக்கியராஜ் வீட்டிற்கு வந்து அவரை போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி கூறியுள்ளனர். இதனால் பாக்கியராஜை அவரது பெற்றோர் சத்தம் போட்டுள்ளனர். 

    இதில் மனமுடைந்த பாக்கியராஜ் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பால்ராஜ் புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    வேளாங்கண்ணி லாட்ஜில் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஆனைகுப்பம் கள்ளிடைமேடு பகுதியை சேர்ந்தவர் களியபெருமாள். இவருடைய மகன் சுதாகர் (வயது 30). இவர் சென்னையில் கொத்தனராக வேலை பார்த்து வந்தார்.

    இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 11-ந் தேதி நாகை வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அங்கு உள்ள ஒரு லாட்ஜில் அவர்கள் அறை எடுத்து தங்கினர்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு 7.30 மணியளவில் சுதாகருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. இதனால் அறையில் இருந்து வெளியே சென்ற சுதாகர் செல்போனில் பேசிவிட்டு மீண்டும் தனது அறைக்கு வந்தார்.

    அப்போது அறையில் இருந்த அவரது காதலி செல்போனில் பேசியது யார்? என கேட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து சுதாகர் குளியல் அறைக்கு சென்றார். இதன்பின் அவர் வெளியே வரவில்லை. இதனால் அவரது காதலி குளியல் அறை கதவை திறந்த போது குளியல் அறைக்குள் சுதாகர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது காதலி சத்தம் போட்டார். இதைக்கேட்டு ஓடி வந்த விடுதி பணியாளர்கள் சுதாகரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சுதாகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

    இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகர் தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது காதலியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடன் பிரச்சினை காரணமாக ஸ்டூடியோ உரிமையாளர் தற்கொலை செய்த சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). இவர் தஞ்சை பழைய பஸ் நிலைய பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வந்தார்.

    ரமேஷ், தனது ஸ்டூடியோ தொழில் அபிவிருத்திக்காக சிலரிடம் பணம் கடன் வாங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ரமேசுக்கு தொழில் சரிவர நடைபெறவில்லை என கூறப்படுகிறது. மேலும் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு ரமேசுக்கு நெருக்கடி கொடுத்தனர். கடன் தொல்லையால் ரமேஷ் மனமுடைந்து வந்தார்.

    இந்த நிலையில் ரமேஷ், கடந்த 3 நாட்களாக வீட்டுக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவரது தாய், இன்று காலை ரமேசை தேடி ஸ்டூடியோவுக்கு வந்தார்.

    அங்கு போட்டோ எடுக்கும் அறையில் உள்ள மின்விசிறியில் ரமேஷ் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதை பார்த்து அவரது தாய் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

    இதுபற்றி தஞ்சை கிழக்கு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் கடன் தொல்லை காரணமாக ரமேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தூக்க மாத்திரைகளையும் அவர் சாப்பிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    தற்கொலை செய்து கொண்ட ரமேசுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    திருவாரூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரன் தெருவை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த சிவஞானராணி (21) என்ற இளம்பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    தற்போது சிவஞானராணி 2 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 8-ந்தேதி கணவன்-மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது சிவஞானராணி, முரளிதரனை கண்டித்து பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த முரளிதரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டார். அந்த சமயத்தில் அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து முரளிதரனை மீட்டனர். பின்னர் அவர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முரளிதரன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து முரளிதரனின் தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிரேகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×